சிபிராஜ் நடிக்கும் கபடதாரி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

57

சிபிராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 20 ம்தேதி வால்டர் படம் வெளியானது. இந்த படத்துக்கு ஏற்பட்ட துரதிருஷ்டம் என்னவென்றால். இந்த படம் பற்றிய விமர்சனங்கள் வெளியே தெரிவதற்கு முன்பே தியேட்டர்கள் லாக் டவுன் பிரச்சினையால் அடைக்கப்பட்டதுதான். இதனால் முறுக்கேறிய மீசையுடன் காவல்துறை உயரதிகாரியாக நடித்த சிபிராஜின் இந்த படம் வெளியில் அவ்வளவாக பேசப்படவில்லை.

இந்நிலையில் சிபிராஜ் நடிப்பில் மீண்டும் ஒரு போலீஸ் படம் தயாராகிறது. இந்த படத்தின் பெயர் கபடதாரி பிரதீப் இயக்கி இருக்கும் இப்படத்தில் சிபிராஜுடன், நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஜனவரி 28 தைப்பூசத்தன்று ரிலீஸ் ஆகிறது.

பாருங்க:  விஜய் சேதுபதி நடிக்கும் 19 பட பர்ஸ்ட் லுக்