சிபிராஜ் பிறந்த நாள் அவரின் புதிய பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

சிபிராஜ் பிறந்த நாள் அவரின் புதிய பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

கடந்த 2003ல் ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிபி சத்யராஜ் .தொடர்ந்து இதுவரை 18 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள படங்களில் இதுவரை பெரிய வெற்றியை எந்த படமும் ருசித்ததில்லை. நாணயம் , நாய்கள் ஜாக்கிரதை, போன்றவை வித்தியாசமான கதையம்சமுள்ள படம் என்பதால் ஓரளவு வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் புதிதாக நடித்து வரும் 18வது படமான கபடதாரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சிபிராஜின் பிறந்த நாளையொட்டி நேற்று வெளியிடப்பட்டது.

சூர்யா இப்போஸ்டரை ரிலீஸ் செய்து அவருக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.