நெல்லை மாவட்டத்தில் பழவூர் என்ற இடத்தில் ப்ளெக்ஸ் போர்டை அகற்ற சொன்ன பெண் எஸ்,ஐ மீது கழுத்தறுக்கப்பட்டு , பல்வேறு இடங்களில் கத்திக்குத்து முயற்சியும் நடந்துள்ளது.
நெல்லை பழவூர் என்ற இடத்தில் மார்கரெட் தெரசா என்ற எஸ்,ஐ யே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர்.
கத்தியால் குத்திய ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை,
திருநெல்வேலி, பழவூர் எஸ்ஐ மார்க்ரெட் தெரசா அவர்களை கயவர்கள் கழுத்தறுத்து கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். காவல்துறையினர் மீது கயவர்களுக்கு எந்தவிதமான பயமும்
அறிவாலயம்
அரசில் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக இது காட்டுகிறது! அவர் விரைந்து குணமடைய ஆண்டவனை வேண்டுகின்றேன் என கூறியுள்ளார்.