15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை இப்போதுதான் குடிக்கிறேன்! ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட தகவல்!

15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை இப்போதுதான் குடிக்கிறேன்! ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட தகவல்!

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள வீட்டிலேயே முடங்கியுள்ள ஸ்ருதி ஹாசன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் காபி குடிப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தந்தையைப் போலவே நடிப்பு, பாடல் மற்றும் இசை எனப் பல்துறை திறமை வாய்க்கப்பெற்றவர். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வந்தார்.

இப்போது கொரோனா காரணமாக தனிமையில் இருக்கும் அவர், தனது சமூகவலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் பாடல் பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், இன்ற் கையில் காபி கப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து காஃபி குடிப்பதாக கூறி மோசமான முக ரியாக்ஷனை போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் செம அவைரலாகி வருகிறது.