பிரபல நடிகையின் கணவருக்கு கொரோனா சோதனை! முடிவு என்ன?

பிரபல நடிகையின் கணவருக்கு கொரோனா சோதனை! முடிவு என்ன?

பிரபல நடிகையான ஸ்ரேயாவின் கணவர் அன்ரீவ் கோஸ்சிவ்வுக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மழை, திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் சிவாஜி ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான ஆந்த்ரேய் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டில் வசித்து வந்தனர். அங்கு கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் தனது கணவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஆந்த்ரேய்க்கு அதிகமான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்து பார்க்கலையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது.

ஆனாலும் இருவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.