அவர் மட்டும் அதை சொல்லியிருந்தால் கொலையே செய்திருப்பேன்! சோயிப் அக்தர் பகிர்ந்த ரகசியம்!

1152

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முனனாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது கேப்டன் வாசிம் அக்ரம் குறித்து பெருமையாகப் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 1998 முதல் 2011 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். அவரது காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பவுலராக திகழ்ந்தார். இந்நிலையில் தற்போது இணையதளத்தின் மூலம் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில அவரது வீடியோவில் ‘‘நான் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னதாக வாசிம் அக்ரமின் பல்வேறு போட்டிகளை பார்த்துள்ளேன். இக்கட்டான நேரங்களில் சிறப்பாக பவுலிங் செய்து அணிக்கு எப்படி வெற்றி பெற்று தருகிறார் என வியந்துள்ளேன்.  அணியில் இடம்பெற்ற பின் அவருடன் சேர்ந்து 7 அல்லது 8 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். அவர் தலைமையின் கீழ் விளையாடிய போது எனக்கு ஆதரவாக இருந்தார். ஒருவேளை அவர் என்னைப் போட்டிகளில் ‘பிக்சிங்’  அணுகி இருந்தால், அவரை கொலை கூட செய்திருப்பேன். ஆனால் ஒருபோதும் இவர், அப்படி பேசியது கிடையாது’ எனக் கூறியுள்ளார்.

அவர் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான போது கிரிக்கெட்டில் சூதாட்டம் தலைவிரித்தாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  இந்தியாவில் காலடி வைத்த மார்க் ஸூக்கர்பெர்க்! ஜியோவின் பங்குகளை வாங்கிய பேஸ்புக்!
Previous articleஇத்தனை மொழிகளில் வெளியாகிறதா மாஸ்டர்? மாஸான அப்டேட்!
Next articleஇந்தியாவில் காலடி வைத்த மார்க் ஸூக்கர்பெர்க்! ஜியோவின் பங்குகளை வாங்கிய பேஸ்புக்!