cinema news
கணவர் விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியின் முடிவு
ஹிந்தியில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஷில்பா ஷெட்டி. இவர் ராஜ்குந்த்ரா என்ற தொழிலதிபரை சில ஆண்டுகளுக்கு முன்பு மணந்து கொண்டார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரராகவும் இவர்கள் இருந்து வந்தார்கள்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச வீடியோ வழக்கில் கைதானார்.
இங்கிருந்து ஆபாச வீடியோக்களை எடுத்து அதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து இணையத்தில் ஒளிபரப்புவது போல் செய்து வந்துள்ளார்.
இவ்வழக்கில் ராஜ் குந்த்ரா வசமாக சிக்கி கொண்டார். இந்நிலையில் இது போன்ற அவமானகரமான விசயத்தால் தன் கணவர் ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி பிரிய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.