நீங்களாம் எதுக்கு இங்க வறீங்க? – கவினிடம் எகிறிய ஷெரின் (வீடியோ)

185
promo video

கவினுக்கும், ஷெரினுக்கும் இடையே மோதல் உருவாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

பினாலே டாஸ்க் மூலம் நேரடியாக ஒரு போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே அதை நோக்கி எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல் கவின், லாஸ்லியான் சேரன், ஷெரின் ஆகிய நால்வரில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்பட உள்ளார்.

இந்நிலையில், ஷெரினும், கவினும் சண்டை போடும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விளையாடும் நேரத்தில் லாஸ்லியாவிடம் போய் கவின் பேசிக்கொண்டிருக்க கடுப்பான ஷெரின் கூடை பந்துகளை எட்டி உதைத்துவிட்டு வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

 

பாருங்க:  கஞ்சா பழக்கத்திலிருந்து எப்படி மீண்டேன் தெரியுமா? - பாக்யராஜ் ஓப்பன் டாக்