Published
2 years agoon
சசிகலா பெங்களூரு ஜெயிலில் இருந்து விடுதலையானதில் இருந்து தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களுக்கு தொடர்ந்து சென்று வருகிறார். நேற்று முன் தினம் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகன்னாத பெருமாள் கோவிலில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்தார். இது 108 திருப்பதிகளில் 44வது ஸ்தலம் ஆகும், ராகு கேது, பிதுர் தோஷம், குழந்தையின்மை போன்ற பல்வேறு தோஷங்களை நீக்கும் கோவில் இதுவாகும்.
இது போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சென்ற சசிகலா அங்குள்ள செண்பகவல்லியம்மன் கோவிலிலும் தரிசனம் செய்தார். ஸ்தல வரலாறை கோவில் பூஜகரிடம் கேட்டு தெரிந்து கொண்டார் அவர்.
இக்கோவில் கோவில்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற கோவில் ஆகும்.