Entertainment
ஷாருக்கான் விளம்பரத்தை நிறுத்திய பைஜூஸ் நிறுவனம்
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் நடிகர் ஷாருக்கான் செய்வதறியாது தவித்து வருகிறார்.ஷூட்டிங் போன்ற விசயங்களும் இதனால் இவருக்கு தடைபட்டுள்ளது.
இதனிடையே அடிமேல் அடியாக இவருக்கு ஆதரவு தரும் விளம்பர நிறுவனங்களும் பின் வாங்கியுள்ளன.
ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் ஊதியம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்வி தொடர்புடைய பைஜூஸ் நிறுவனத்தில் விளம்பரதாரராக ஷாருக்கான் செயல்பட்டு வந்தார்.
அவர் நடித்துள்ள விளம்பரத்தின் மூலம் தனது ஆப்பை பைஜூஸ் விளம்பரம் செய்து வந்தது.
இந்த நிலையில் ஷாருக்கான் மகன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக அந்த விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
