Connect with us

Latest News

ஷாருக் மகனுக்கு ஆதரவாக ஹ்ரித்திக் ரோஷன்

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாரூக் கான் மகனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்குச் சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு, மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் என்சிபி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விவகாரம் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆர்யன் கான் கைதால் தனது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தையும் ஒத்திவைத்துள்ளார் ஷாரூக் கான்.

தற்போது ஆர்யன் கானுக்கு ஆதரவாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“என் இனிய ஆர்யன்,

வாழ்க்கை என்னும் சவாரி வினோதமானது. அது நிச்சயமற்றது என்பதால்தான் சிறந்ததாக இருக்கிறது. நம்மிடம் அது பிரச்சினைகளை வீசுவதால்தான் உயர்ந்ததாக இருக்கிறது. ஆனால், கடவுள் கனிவானவர். வலிமையானவர்களுக்குத்தான் கடுமையான சிக்கல்களைத் தருவார்.

இந்தக் குழப்பத்துக்கு நடுவில் நீ உன் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டிய அழுத்தத்தை உணரும்போது, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை உணரலாம். அதை நீ இப்போது உணர்வாய் என்று எனக்குத் தெரியும். கோபம், குழப்பம், இயலாமை, ஆ.. உனக்குள் இருக்கும் நாயகனை வெளியே கொண்டுவரத் தேவையான விஷயங்கள் இவையே.

பாருங்க:  மத்தாப்பு -கித்தாப்பு கமலின் வித்தியாசமான தீபாவளி வாழ்த்து

ஆனால், அந்த விஷயங்கள் உனக்குள் இருக்கும் இரக்கம், கருணை, அன்பு ஆகிய நல்லவற்றையும் கூட எரித்துவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இரு. போதுமான அளவு உனக்குள் கொழுந்து எரியட்டும். உன் அனுபவத்தில் கிடைக்கும் விஷயங்களில் எதை வைத்துக்கொள்ள வேண்டும், எதைத் தூக்கியெறிய வேண்டும் என்று உனக்குத் தெரிந்தால் தவறுகள், தோல்விகள், வெற்றிகள் எல்லாம் ஒன்றுதான் என்பதும் உனக்குப் புரியும்.

ஆனால், இவற்றோடு உன்னால் நன்றாக முதிர்ச்சியடைய முடியும் என்பதைத் தெரிந்துகொள். உன்னைச் சிறுவனாகவும், வளர்ந்த ஆண் பிள்ளையாகவும் எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நீதான் பொறுப்பு என்று அவற்றை ஏற்றுக்கொள். எல்லா அனுபவங்களையும் ஏற்றுக்கொள். அவைதான் உனக்கான பரிசுகள்.

ஒரு கட்டத்தில் எல்லாம் உனக்குப் புரியும்போது இவற்றின் அர்த்தமும் உனக்குப் புரியும். அனைத்தையும் நன்றாகக் கவனி. இந்தத் தருணங்கள்தான் உன்னை உருவாக்கும். உனக்கான சிறப்பான காலம் காத்திருக்கிறது.

ஆனால், அந்த வெளிச்சத்துக்கு முன்னால் நீ இருட்டைக் கடந்தாக வேண்டும். அமைதியாக இரு. அனைத்தையும் ஏற்றுக்கொள். வெளிச்சத்தை நம்பு. உனக்குள் இருக்கும் வெளிச்சத்தையும்”.

இவ்வாறு ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

Entertainment

பேரன்களுடன் அண்ணாத்த படம் பார்த்த ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. தீபாவளி திருநாளில் வெளியாகும் இப்படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு (27.10.2021) அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகு ரஜினியின் பேரன் கட்டிப்பிடித்ததை நெகிழ்ச்சியாக ரஜினிகாந்த் Hoote சமூக வலைதளம் மூலம் குரல் பதிவாக பகிர்ந்துள்ளார். முழு குரல் பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  செயல் பாபு அல்ல சினேக்பாபு- சேகர் பாபு குறித்து ஹெச்.ராஜா விமர்சனம்
Continue Reading

Entertainment

பாலா பற்றி திடீரென வாய் மலர்ந்த சூர்யா

நடிகர் சூர்யா நடிகர் சிவக்குமாரின் வாரிசு என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. சூர்யாவும் என்னென்னவோ நடித்து பார்த்தார். விக்ரம் பட்ட கஷ்டம் போல சூர்யாவும் படாத கஷ்டமில்லை இருந்தாலும் சினிமாவில் முன்னேற்றமில்லாமல் இருந்தார்.

இயக்குனர் பாலா சேது முடித்து அந்த வெற்றிக்களிப்பில் இருந்த கையோடு அடுத்த படமாக நந்தாவை துவக்கினார். இதில் சூர்யாவுக்கு சிறப்பான வேடம் கொடுத்தார்.

இந்த படத்தின் மூலம் சூர்யாவின் சினிமா வாழ்க்கை மாறியது. அடுத்த மாதம் 14ம் தேதியுடன் சினிமாவின் தன் வெற்றியை சூர்யா துவக்கி 20 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என சூர்யா கூறியுள்ளார்.

பாருங்க:  பழம்பெரும் நடிகர் விசு காலமானார்
Continue Reading

Entertainment

எல்லா படங்களிலும் கலக்கும் கிங்ஸ்லி

சந்தானத்துடன் சில படங்களில் இணைந்து நடித்து  காமெடி செய்தவர் கிங்ஸ்லி. சூரி ஒரு ஸ்டைல் யோகிபாபு ஒரு ஸ்டைல் என்றால் இவரின் ஸ்டைல் வேற மாதிரி உள்ளது. இவரின் காமெடிகள் வித்தியாசமான ஸ்டைலில் உள்ளதால் சமீப காலமாக வரவேற்பு பெற்று வருகிறார்.

ரஜினி நடித்துள்ள அண்ணாத்தே படத்திலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்திலும் இவரின் காமெடி பெரிதும் பேசப்பட்டது.

இதனால் மற்ற காமெடி நடிகர்களை பின்னுக்கு தள்ளி இவர் விரைவில் முன்னேறி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

பாருங்க:  மத்தாப்பு -கித்தாப்பு கமலின் வித்தியாசமான தீபாவளி வாழ்த்து
Continue Reading

Trending