Entertainment
ஐந்து வருடத்துக்கு பிறகு அடுத்த வருடம்தான் ஷாரூக் படம் ரிலீஸ்
ஷாருக் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் ஜீரோ. இந்த படத்துக்கு பிறகு ஷாரூக் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
முதலில் கொரோனா வந்தது அதனால் ஏற்பட்ட தொடர் லாக் டவுன்கள் அதற்கு பிறகு வந்த டெல்டாகொரோனா பிரச்சினைகளால் ஷூட்கள் அதிகம் நடக்காததால் ஷாருக் படம் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது.
அதன் பின் ஷாருக்கின் மகன் போதை மருந்து கடத்தலில் சிக்கியதால் மிகுந்த மன உளைச்சலில் ஷாருக் இருந்தார். இதனால் இவரின் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த நிலையில் தற்போதுதான் நிலைமைகள் சீராகியுள்ளதால் அடுத்த வருடம் ஜனவரி 25ம் தேதி இவர் நடித்துள்ள பதான் படம் வெளிவருகிறது.
இதனால் 5 வருடங்களுக்கு பின் அடுத்த வருடம் தான் ஷாருக் படம் வெளிவருவதாக கூறப்படுகிறது.
