கோவை சிங்கா நல்லூரில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தவர் சுப்பிரமணியம். இவரை தெரியாத கோயம்புத்தூர்காரர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் மிக குறைந்த விலையில் மதிய உணவு உட்பட பல உணவுகளை தினசரி வழங்கி வருகிறார். வெறும் 20 ரூபாய் இருந்தால் நன்றாக சாப்பிட்டு வரலாம். 20 ரூபாய்க்கு கொடுக்கிறார் என்பதற்காக ஏனோ தானோவென்று இல்லாமல் உயர்தர சைவ உணவகத்தில் என்ன மாதிரி வெரைட்டியான சாப்பாடு கொடுப்பாங்களோ அதே அளவு இவரும் கொடுத்து மதிய சாப்பாடு தினசரி 3000 பேருக்கு குறைந்த விலையில் கொடுக்கப்பட்டது.
கோவை நகரத்தில் வேலை செய்து வருபவர்கள் சிங்கா நல்லூரிலேயே அறை எடுத்தும் வீடு எடுத்தும் தங்கியுள்ளனர் இதற்கு காரணம் மிக மிக குறைந்த விலையில் இங்கு சாப்பாடு கிடைப்பதுதான்.
பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரிடமும் பெயர் பெற்ற சாந்தி சோஷியல் சர்வீஸ் சுப்ரமணியம் இன்று காலை காலமானார்.
அவரது மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மிக மிக நல்ல மனிதரான அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்,