Latest News
மறைந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு சாதனையாளர் விருது
இன்று நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோட்டையில் கொடியேற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சாதனையாளர் விருதுகளை வழங்கி வருகிறார். அதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொரோனா பெருந்தொற்றில் பலரும் உயிரிழந்த போது மருத்துவர் சண்முகப்பிரியாவும் உயிரிழந்தார்.
இவர் மதுரை அனுப்பானடியில் மருத்துவராக பணி புரிந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கர்ப்பிணியாக இருந்தும் விடுப்பு எடுக்காமல் இருந்து பணிபுரிந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இந்நிலையில் இவரின் சேவையை பாராட்டி துணிவு மற்றும் சாதனைக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரின் கணவர் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.