Entertainment
கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை விமர்சித்த சனம் ஷெட்டி
பிக்பாஸ் 4 மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனுடன் காதல் கொண்டதும் பின்பு அந்த உறவு முறிந்ததும் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் சட்டசபை தேர்தலில் கோவை தொகுதியில் போராடி தோல்வியடைந்தார் கமல்ஹாசன். இதன் பின் மக்கள் நீதி மய்ய முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மபிரியா ஆகியோர் விலகினர்.
எல்லோருமே தனிப்பட்ட காரணம் என்று சொல்லியே விலகிய நிலையில் , இதை எல்லாம் முன்பே சொல்லி விலகி இருக்கலாமே தோற்றவுடன் ஏன் இப்படி விலகுகிறீர்கள். கமல் அதிகாரத்துக்கு வரவேண்டியதில்லை அவரது தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
