சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது

18

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ஷனம் ஷெட்டி. இவர் சினிமாக்களில் மூலம் நடித்து இருந்தாலும் பிக்பாஸ் மூலமே பிரபலமானார். மேலும் பிக்பாஸில் பங்கேற்ற தர்ஷனை காதலித்ததன் மூலமும் பின்னர் தர்ஷன் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் கமிஷனர் ஆபிசில் புகாரளித்தார்.

இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பாக உரிய ஆதாரங்களையும் போலீசாரிடம் அவர் வழங்கினார். அடையாறு சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது திருவான்மியூர் போலீசார் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாருங்க:  தனுஷ் படங்களிலேயே பட்டாஸ்தான் நம்பர் 1 – தொலைக்காட்சியில் புதிய சாதனை!
Previous articleஅமீர்கான் இவரைத்தான் மணக்கப்போகிறாரா
Next articleமாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படம் எப்போது