தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகஅந்தக்கால பந்தம், பிள்ளை நிலா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஷாலினி. பேபி ஷாலினி என்று அழைக்கப்பட்டார்
பின்னாட்களில் வளர்ந்த உடன் காதலுக்கு மரியாதை, பிரியாத வரம் வேண்டும், அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜீத்துடன் காதல் வயப்பட்டு அவரை மணந்து கொண்டார்.
அஜீத், ஷாலினி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அஜீத்தும் சரி, ஷாலினியும் சரி இது வரை எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லாதவர்கள்.
இந்த நிலையில் ஷாலினியின் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டதாக தெரிய வருகிறது . இந்த டுவிட்டர் கணக்கை புறக்கணிக்குமாறு அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.
There is a fake twitter account in the name of #MrsShaliniAjithkumar and we would like to clarify that she is not in twitter. Kindly ignore the same .
— Suresh Chandra (@SureshChandraa) February 2, 2022