மீண்டும் நடிக்க வந்துள்ள ஷாலினி

13

பிள்ளை நிலா, பந்தம் , ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட 80களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர் ஷாலினி. வளர்ந்த பிறகு இவர்  காதலுக்கு மரியாதை, பிரியாத வரம் வேண்டும், அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜீத்துடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் படங்களில் நடிக்காத ஷாலினி, தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வருகிறார்.

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலினி நடிக்கிறாராம்.

20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஷாலினி நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  சாக்‌ஷியை சந்தித்த அபிராமி - வைரல் புகைப்படம்
Previous articleமாகாபாவின் சமூகப்பணி
Next articleஏ.ஆர் ரகுமான் யாரென்றே தெரியாது- பாலகிருஷ்ணா