Entertainment
ஷகீலாவும் வந்தார் அரசியலுக்கு
ஒரு காலத்தில் மலையாளப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷகீலா. சமீப காலமாக குக் வித் கோமாளி டிவி நிகழ்ச்சியின் மூலமும் பிரபலம் அடைந்துள்ளார். இவரும் அரசியலில் தொபுக்கடீர் என குதித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். இதையடுத்து இவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து பேசிய க ஷகீலா ’தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகியதற்கு காரணம் கேட்டதற்கு நான் காங்கிரஸில் சேர்ந்தது போல அவர் விலகியதற்கும் காரணம் இருக்கலாம் என ஷகிலா கூறினார்.
