Entertainment
சேத்துமான் படம் குறித்து ரஞ்சித்
தமிழ் என்பவர் இயக்கியுள்ள படம் சேத்துமான். இப்படம் வித்தியாசமான கதையமைப்பை கொண்ட படம். இது சோனி எல் ஐ வியில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் இப்படத்தை தயாரித்துள்ளது
இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி கதையை அடிப்படையாக கொண்ட படம் இது.
இந்த படம் குறித்து ரஞ்சித் கூறுகையில், இது போல படங்கள் அவசியமானது. இந்த கதையை இயக்குனர் தமிழ் என்னிடம் கூறியபோது, இயக்குனரை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் அவர் சொன்ன கதையின் மீது நம்பிக்கை இருந்தது.
போட்ட காசை எடுத்துவிடலாம் என்று வழக்கமாக சொல்லக்கூடிய நம்பிக்கைகளை நான் இப்படத்தின் மீது வைக்கவில்லை. இந்த படம் பற்றி நிறைய பாசிட்டிவ் ரிவ்யூக்கள் தான் வருகின்றன.
நல்ல படங்களை இயக்க விரும்புவோர் தாராளமாக நீலம் புரொடக்சன்ஸை அணுகலாம் என ரஞ்சித் கூறியுள்ளார்.
