Connect with us

பிரபல நெறியாளர் செந்தில்வேல் மீது முன்னாள் முதல்வர் எடப்பாடி புகார்

Entertainment

பிரபல நெறியாளர் செந்தில்வேல் மீது முன்னாள் முதல்வர் எடப்பாடி புகார்

டிவிக்களில் விவாத நிகழ்ச்சியை நடத்தி வருபவர் செந்தில்வேல். இவர் சர்ச்சைக்குரிய நெறியாளர் என்று யூ டியூபர் மாரிதாஸ் ஏற்கனவே கூறி இருந்தார்.

பல தொலைக்காட்சிகளில் இருந்து விட்டு தற்போது மாலை முரசு தொலைக்காட்சியில் பணியில் இருக்கும் செந்தில்வேல்,

கடந்த 30.3.2022  அன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி மீது தேவையில்லாத குற்றச்சாட்டை ஒரு விவாத நிகழ்ச்சியில் கூறி இருப்பதாக முதல்வர் எடப்பாடி கூறி இருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது.

30.3.2022 அன்று மாலை முரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில், நெறியாளர் செந்தில்வேல் என்பவர், நான் தமிழக முதல்வராக இருந்தபோது , தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன்,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது , எனது மகனையும் உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும்

கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு மாறாக, அபாண்டமாக வீண் பழி சுமத்தினார் எனது நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்த அந்த நெறியாளர், மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,

தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

பாருங்க:  சினம் திரைப்படம் தியேட்டரில்

More in Entertainment

To Top