5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் சொன்னது என்னாச்சு?

183
sengotayan

நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்கிற அரசின் அறிவிப்பு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 5 மற்றும் 8 வது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை இயக்குனர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கடந்த பிப்ரவரி 22ம் தேதி கருத்து தெரிவித்திருந்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ‘பொதுத்தேர்வு குறித்து எந்த ஆணையும் அரசு பிறப்பிக்கவில்லை. எனவே நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவரக்ளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ‘ மத்திய அரசின் அறிவிப்புபடி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காகத்தான் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வால் இடை நிற்றலுக்கு வாய்ப்பே இல்லை. இதில் தோல்வி அடைந்தாலும் 3 ஆண்டுகளுக்கு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல தடையில்லை. 3 ஆண்டுகளுக்கு பினே பொதுத்தேர்வு நடத்துவது முழுமையாக அமுல்படுத்தப்படும். இந்த காலத்தில் மாணவர்களின் தேர்ச்சியை பொறுத்து அவர்களின் கல்வித்திறன் மேம்படுத்தப்படும்’ என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  மனம் மாறிய நடிகர் ஜெய் - இனிமேல் புரமோஷனுக்கு வருவாராம்