sengotayan

ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி – செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி சென்னை அண்ணா நூலகத்தில் நல்லாசிரியர்கள் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய செங்கோட்டையன் ‘ இன்று ஆசிரியர்களின் நிலைமை முன்பு போல் இல்லை. ஒரு மாணவனை அதட்ட கூட முடியவில்லை. தற்போது மாணவர்களுக்கு கொடுப்பது போல் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்குவார் என தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இனிமேல் புதிதாக தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.