sengotayan

கோட் சூட்.. பியானோ.. பேஸ்கெட் பால் – வைரலாகும் செங்கோட்டையன் புகைப்படங்கள்

அமைச்சர் செங்கோட்டையன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல்வாதிகளை பொறுத்தவரை எப்போதும் வேட்டி, சட்டை அணிந்தே வலம் வருவார்கள். ஆனால், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது அவர்கள் வேறு உடைகள் அணிவதுண்டு. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்கு சென்ற போது அவர் கோட் சூட் அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். கல்வித்துறையில் அந்த நாடு பெற்றுள்ள வளர்ச்சியை தெரிந்து கொள்ள அவர் அங்கு சென்றார் அங்கு இருந்த 4 நாட்களும் அவர் கோட் சூட் அணிந்து வலம் வந்தார். அதன்பின் அவர் தமிழகம் திரும்பிவிட்டார்.

இந்நிலையில், உற்சாகமாக அவர் பியானோ வாசிக்கும், கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.