25 சதவீத ஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை – செங்கோட்டையன் அறிவிப்பு

237
sengotayan

சிபிஎஸ்இ பள்ளிகளை நசுக்குவது அரசின் நோக்கமல்ல. ஆனால், ஏழை மாணவர்களும் அதே தரத்தோடு கல்வி பயில வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகள் நிர்வாக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும். சிபிஎஸ்இ பள்ளிகளை நசுக்குவது அரசின் நோக்கமல்ல. ஆனால், ஏழை மாணவர்களும் அதே தரத்தோடு கல்வி பயில வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. 25 சதவீதம் ஒதுக்கிடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

பாருங்க:  5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - செங்கோட்டையன் சொன்னது என்னாச்சு?