sengotayan

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

5ம் மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Sengottaiyan says no public exam for 5th and 8th students – ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. எனவே 5 மற்றும் 8 வது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

students

இந்நிலையில், செய்தியாளர்களிடம் இன்று பேசிய செங்கோட்டையன் ‘முதலமைச்சரோடு ஆலோசனை செய்து 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு பெறப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 3 ஆண்டுகளுக்கு பழைய முறையே தொடரும். அதன்பின் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு கல்வித்தரத்தை உயர்த்த வேண்டி அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது’ என அவர் தெரிவித்தார்.

செங்கோட்டையனின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.