இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் என் ஜி கே படத்துக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். சாணி காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஒரு தத்துவத்தை டுவிட்டியுள்ளார் இதோ அந்த தத்துவம்.
நான் அங்கே இருந்தால் நிம்மதியாய் இருப்பேன் , இங்கே இருந்தால் நிம்மதியாய் இருப்பேன் என்று ஒரு போதும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் ! அது வெறும் மாயை ! வாழ்க்கையை முற்றிலும் கெடுத்து விடும் ! இருக்கும் இடமே நிம்மதி ! சொர்க்கம் ! கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரியும் .
இவ்வாறு செல்வராகவன் கூறியுள்ளார்.