எனது உலகம் திரும்புகிறேன் – செல்வராகவன்

69

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் வித்தியாசமான கதையுடன் களமிறங்கிய செல்வராகவன் அதில் பெற்ற வெற்றியால் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கினார் எல்லாவற்றிலும் வெற்றியும் பெற்றார்.

கடைசியாக என் ஜி கே என்று சூர்யாவை வைத்து படம் இயக்கினார். என் ஜி கே பெரிய அளவில் போகவில்லை.

இதற்கிடையில் இவர் ஏற்கனவே இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மறுபாகம் இயக்க வேண்டும் என் ஆசை என அதை பற்றிய பதிவுகளாக தனது டுவிட்டர் பதிவுகளில் நீண்ட நாளாக இட்டு வந்தார்.

இப்போது அவரது ஆசை நிறைவேறிய நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகமாக வரும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் என்னுடைய உலகம் திரும்புகிறேன் என  ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்குக்கு செல்ல இருப்பதை செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  தேன் பட டிரெய்லர் இன்று வெளியாகிறது