திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி. முதல் படம் க்ரெளட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மோகன் ஜி மீது ஜாதி ரீதியான மதரீதியான விசயங்களை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு.
இருப்பினும் இவரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ருத்ர தாண்டவம் இவருக்கு மிகப்பெரிய ப்ரேக்கை கொடுத்தது.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக இயக்குனர் செல்வராகவனுடன் ஒரு புதிய படம் இணைகிறார். யாரும் எதிர்பாராமல் செல்வராகவன் நடிப்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Pleasure is all mine ! Looking forward to this exciting new journey . God bless https://t.co/A3X8WtizV8
— selvaraghavan (@selvaraghavan) December 4, 2021