சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணி மாமனிதன் பட அப்டேட்

சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணி மாமனிதன் பட அப்டேட்

தமிழில் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சீனு ராமசாமி. அதன் பின் இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் கமர்ஷியல் விசயம் ஏதுமில்லாது. கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்வியல்களை படம்பிடித்து காட்டியதால் இவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும் இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை கொடுத்தது.

இவர்தான் விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவராவார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் பற்றி இவர் டுவிட்டரில் கூறிய அப்டேட் தனது கதாநாயகியை பற்றி கூறிய இவர் படத்தின் எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் அருமையாக இருப்பதால் அவர் பாராட்டப்பட இருக்கும் நாளை காண ஆவலோடு இருக்கிறாராம். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.