Latest News
செய்தியாளர் சந்திப்பில் திடீரென மயங்கிய சீமான்
திருவொற்றியூரில் போராட்டம் நடத்தச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார்.
திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதிகளில் வீடுகள் இடிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சீமான் சென்றிருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார்.
செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் #SunNews | #Seeman | #NTK pic.twitter.com/VqaL6laxRh
— Sun News (@sunnewstamil) April 2, 2022