Latest News
செருப்பு பிஞ்சிடும் என பேசியதால் சீமான் மீது சர்ச்சை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மேடைகளில் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு பேசுவது வழக்கம். சில சமயங்களில் அவர் ஆக்கப்பூர்வமான கருத்தை பேசினாலும் தவறான வார்த்தைகளால் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதும் வழக்கமாக உள்ளது.
நேற்று ஒரு கட்சிக்கூட்டத்தில் பேசிய சீமான், தம்பி மாரிதாஸ கேஸ் இல்லாம விடுதலை பண்ணிருக்காங்க, தம்பி துரைமுருகன நான் நாலு மாசமா பிணையில் எடுக்க போராடுறேன் முடியல.
எங்களை பாஜகவின் பி டீம் என்று சொல்லுறாங்க. நீங்கதாண்டா பி டீம் உண்மையான சங்கி எங்களை போய் சொல்ற செருப்பு பிஞ்சிரும் என காலில் மாட்டி இருந்த செருப்பை தூக்கி காண்பித்து பேசினார்.
இந்த நிகழ்வுகள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திமுகவினர் சீமான் மீது செருப்பு பிஞ்சிரும் சீமான் என ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து விட்டுள்ளனர்.
இந்த ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
