தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட் சூட் அணிந்த புகைப்படங்கள் மீது எழுந்துள்ள கிண்டல் குறித்து நாம் தமிழர் சீமான் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 28ம்தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் மொத்தம் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவரும் ஒப்பந்தங்களை அவர் பெற்றுவருவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருக்கும் அவர் வேட்டி, சட்டையிலிருந்து கோட் சூட்டிற்கு மாறி முக்கிய பிரமுகர்களை சந்தித்த புகைப்படங்கள் நேற்று வெளியானது. இதை கிண்டலடித்து சில மீம்ஸ்களும் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான் ‘என்ன ஆடை அணிவது என முடிவெடுப்பது அவரின் உரிமை. அதை விமர்சிக்கக் கூடாது. அந்த நாட்டிற்கு ஏற்ற உடையை அவர் அணிந்திருக்கலாம். அதை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள். அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர். விட்டுக் கொடுக்க முடியாது’ என அவர் பேட்டி கொடுத்தார்.