நாம் தமிழர் கட்சி வாங்க வேண்டிய ஓட்டுகளை கமல்ஹாசன் வாங்கிவிட்டார் என சீமான் புலம்பியுள்ளார்.
தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் 38 தொகுதிகளில் மக்களவை தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இதில், 37 மக்களவை தொகுதி மற்றும் 13 சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், ஒரே ஒரு மக்களவை தொகுதியிலும், 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
இதில், ஆச்சர்யமாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. சில இடங்களில் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகளை மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
ஏறக்குறையை 16 லட்சம் வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சிக்கு இணையாக மக்கள் நீதி மய்யம் முன்னேறியுள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்த சீமான் ‘கமல்ஹாசன் 50 வருடங்களாக சினிமாவில் நடிக்கிறார். எனவே, அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளது.அதோடு அவர் வெள்ளையாக இருப்பதல் அவர் நல்லவர் என நம்பி மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் வழக்கமாக விழும் ஓட்டுகளை இந்த முறை கமல்ஹாசன் வாங்கி விட்டார்” என அந்த பேட்டியில் சீமான் கூறியுள்ளார்.