Tamil Flash News
மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் பெற்ற வாக்குகள் தெரியுமா?
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்ய மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நல்ல வாக்குகளை பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்த்து இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும், தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடந்தது.
இந்த தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் திமுக 38 இடங்களையும், அதிமுக ஒரு இடங்களையும் பெற்றுள்ளது. ஆனால், 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களை திமுகவும், 9 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் எந்த தொகுதியிலும் முன்னணியில் கூட வரவில்லை. ஆனால் பல தொகுதிகளில் அமமுக மூன்றாம் இடத்தில் இருந்தது. அதே சமயம் இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 16.50 லட்சம் வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி 16.67 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.