Latest News
ஆடி திருவாதிரைக்கு விடுமுறை கொடுங்க- சீமான்
ஆடி திருவாதிரை நாள் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். இது என்ன புதிதாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம் காரணம் இல்லாமல் சீமான் சொல்ல மாட்டார்.
ஆடி திருவாதிரை நாளன்று தான் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆகும்.
தன் ஆளுமை திறனால் பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு மரக்கலங்கள் கட்டி கடல் கடந்து தனது வீரத்தை நிலைநாட்டியவர். ஆடி மாதம் திருவாதிரை நாளன்று பிறந்த இவரின் பிறந்த நாளுக்கு அரசு சார்பில் விடுமுறை விட வேண்டும் என சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.