Tamil Flash News
இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு – திரையுலகம் அதிர்ச்சி
வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம், அடூர் கோபால கிருஷ்ணன், நடிகை ரேவதி என பல்வேறு துறைகளின் ஆளுமைகள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறை கட்டவிழ்த்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு எதிராக பிகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். சிறப்பாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு அவதூறு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து தலைமை மாஜிஸ்திரேட் சுதிர் காந்த் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். எனவே, மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதும் தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.