Latest News
அந்தரங்கத்தை பேசினால் புண்ணியங்கள் குறையுமா?
ஹிந்து தர்ம சாஸ்திரம் பல்வேறு விசயங்களை பாவம் என எடுத்துறைக்கிறது. நாம் அதை புரிந்துகொள்வதில்லை. நாம் நல்லதே செய்தாலும் ஏதோ ஒரு வழியில் அடுத்தவரை தவறாக பேசிக்கூட பாவச்சேற்றில் விழுகிறோம்.
நம்மில் பலருக்கு அடுத்தவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி இஷ்டத்துக்கு பேசுவது ரொம்ப பிடிக்கும்.
அதை அடிக்கடி பேசுவதால் நம் புண்ணியம் விரையம் ஆகும் என்பது யாருக்காவது தெரியுமா?
ஒழுக்கமில்லாமல் வாழ்ந்து வருபவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று நம்புகிறோம். ஏன் தெரியுமா?
அவர்களை பற்றி நாம் அறிந்த அந்தரங்க உண்மைகளை மற்றவர்களிடம் சொல்ல சொல்ல சொல்ல நாம் அன்றைக்கு உண்டாக்கிய புண்ணியத்தை அவர்களுக்கு தானம் செய்து விடுகிறோம்.
இந்த நடிகை அந்த நடிகரோடு இந்த நாட்டில் இப்படி இப்படி மஜாவாக இருந்தார் என்று ஒருவரிடம் சொல்லும் போதே அன்றைக்கு நாம் செய்த தானங்கள் ,மந்திர ஜபம்,கோவிலுக்கு போய் விட்டு வந்ததால் உண்டான புண்ணியம்,யாருக்காவது முகவரி சொன்ன தால் கிட்டிய புண்ணியம் அனைத்தும் அந்த நடிகர் நடிகைக்கு உடனே போய் சேர்ந்து விடும்!!!
நமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் செய்து வரும் அந்தரங்க வாழ்க்கை பற்றி யாரிடமும் சொன்னாலும் இதே நிலை தான்!!!
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்:-
எல்லோருக்கும் அந்தரங்க வாழ்க்கை உண்டு.அதை அறிந்து கொள்வது தப்பு இல்லை.எல்லோரிடமும் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பது தான் தப்பு.
இதை நமக்கு உப தேசமாக சொல்லி இருப்பது மனுதர்ம சாஸ்திரம்