இரண்டாம் வருட கொண்டாட்டத்தில் பேட்ட

70

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் பேட்ட. இப்படம் கடந்த 2018 பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. ரஜினியின் பழைய படங்களில் அவரின் ஸ்டைலுக்காக அவரை ரசித்த ரசிகர்கள்தான் அதிகம்.

இந்த ஸ்டைல் என்பது 2000க்கு பின்பு வந்த படங்களில் அவ்வளவாக இல்லாமல் போனது. கபாலி படத்தின் ஸ்டில்கள் கெட் அப் நன்றாக இருந்தது. இருப்பினும் இளமையான கதாபாத்திரத்தில் ரஜினி அதில் நடிக்கவில்லை.

பேட்ட படத்தில் மிக இளமையாக நடித்த ரஜினியின் புகைப்படங்கள் கலக்கலாக இருந்தன. அதில் ரஜினியின் பழைய ஸ்டைல் அப்படியே இருந்தது.

இதை பார்த்து ஒரு ரசிகர் கூட கார்த்திக் சுப்புராஜ் காலில் விழுந்து என் தலைவரை அப்டியே கொண்டு வந்துட்டிங்க என செய்திகள் வெளியானது.

பேட்ட ஒரு அதிரடி திரைப்படம் அனிருத்தின் இசையில் ரஜினி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

அந்த படத்தின் நாட்களை கார்த்திக் சுப்புராஜ் நினைவு கூர்ந்துள்ளார். இன்றோடு இப்படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிறது.

பாருங்க:  நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ஏலே- லேட்டஸ்ட் டிரெண்ட்