இவர் இரண்டாவது திருமணம் செய்கிறாரா

53

கன்னட படங்கள் பலவற்றில் கதாநாயகியாக நடித்து முன்னணி நாயகியாக விளங்கியவர் நடிகை பிரேமா. தமிழிலும் சத்யராஜ் நடித்த அழகேசன், தாயே புவனேஸ்வரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய ஹிட் படங்களில் நடித்ததில்லை. ஆனால் கன்னடத்தில் நிறைய முன்னணி படங்களில் நடித்துள்ளார் இவர்.

இவர் பெங்களூருவை சேர்ந்தவர். கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தெலுங்கில் 28-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த பிரின்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு விருதும் பெற்றுள்ளார்.
இவர் 2006ல்

ஜீவன் அப்பாச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில் நடிகை பிரேமா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும், மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால் நடிகை பிரேமா இதனை உறுதிப்படுத்தவில்லை.
பாருங்க:  உதவியாளருக்காக சமந்தா செய்த செயல் – ரசிகர்கள் வியப்பு !
Previous articleசுஷாந்த் பெயரில் நிதி வசூல்- தங்கை எச்சரிக்கை
Next articleசீமான் 5 லட்சம் கொரோனா நிதியுதவி