Latest News
அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் நடவடிக்கை- தமிழக அரசு
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவன் உயிருடன் இருக்கையில் 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம். இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நடத்தை செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்தியத் தண்டனைச் சட்டம் 494 ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937-இன் படி அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
