Latest News
தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னே இறந்த இரண்டாவது வேட்பாளர்
திமுக, காங்கிரஸ் கூட்டணியின் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி வேட்பாளர். சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பலியானார். இன்னும் ரிசல்ட் வருவதற்கு 18 நாட்கள் இருக்கும் நிலையில் முடிவை அறிந்து கொள்ளாமலே இறந்து விட்டார்.
இது போல தேனி மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மோகன் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி இரவு வீட்டில் கழிவறைக்கு சென்றபோது வேட்பாளர் மோகன் வழக்கி விழுந்தார். தலையிலும் இடுப்பிலும் பலத்த காயம் அடைந்த மோகன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
