ரஷ்யாவில் திடீரென நிலத்தில் உருவாகியுள்ள பெரிய பள்ளம் விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரஷ்யாவின் துலா நகரத்துக்கு அருகே உள்ள டெடிலோவா எனும் கிராமத்தில்தான் இந்த மெகா பள்ளம் உருவாகியுள்ளது. இந்த 49 அடி அகலமும், 98 அடி ஆழமும் கொண்டு இந்த பள்ளம் உருவாகியுள்ளது.
ஒரு விவசாய நிலம் அருகே இந்த பள்ளம் உருவாகியுள்ளாது. திடீரென இந்த பள்ளம் எப்படி உருவானது எனத் தெரியவில்லை. இந்த பள்ளத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதற்கு முன் இவ்வளவு பெரிய பள்ளம் எந்த நாட்டிலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக உலகில் ஏதும் பெரிய அழிவு ஏற்படுவதற்கு முன் இதுபோன்ற சில சம்பங்கள் நிகழும். எனவே, இந்த பள்ளம் ஏற்பட்டதன் காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.