Latest News
இன்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் துவக்கம்
கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக திறக்கப்படவேயில்லை. மற்ற இடங்கள் திறந்தாலும் நிலைமையை சமாளிக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஆனால் சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் என்பதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்க அரசு தயாராக இல்லை. நீண்ட நாட்களாக பள்ளிகள் திறப்புக்கு மவுனம் சாதித்து வருகிறது.
பள்ளிக்கூடங்கள் திறப்பதில் புதிய தளர்வுகளை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தின் பெரிய நகரமான காரைக்காலிலும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
வரும் 8ம்தேதி முதல் பாடங்கள் ஆரம்பமாகிறது.