Latest News
வட மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
இந்த கொரோனா காலத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகளின் கல்விதான். 6 மாதத்திற்கும் மேலாக குழந்தைகள் பாடப்புத்தகத்தை கையில் எடுப்பதில்லை. பல இடங்களில் ஆன்லைன் கிளாஸ் நடத்தப்படுகிறது. இருப்பினும் நேரடி கல்வி முறை இல்லாமல் குழந்தைகள் பல பாடங்களை மறந்து விட்டது.
இந்நிலையில் 6 மாதத்திற்கு பிறகு வட மாநிலங்கள் பலவற்றில் இன்று முதல் பள்ளி திறக்கப்படுகிறது. இருப்பினும் குழந்தைகள் பெற்றோரின் விருப்பம் இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்பலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், அரியானா , அஸ்ஸாம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறிது சிறிதாக இதுபோல் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்று முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
