Corona (Covid-19)
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது??
தமிழகத்தில் மே 31ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடையும் நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் தமிழக முதல்வர்.
இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என குறித்தும், 10ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். 6 முதல் 12ம் வகுப்புக்கு வரை ஆகஸ்ட் மாதத்திலும், 1 முதல் 5ம் வகுப்புக்கு செப்டம்பரில் வகுப்புகளை தொடங்கயுள்ளதாகவும், தமிழக அரசு திட்டம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.