Latest News
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்ன முடிவெடுத்துள்ளது அரசு- முதல்வர் எடப்பாடி
கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடிய பள்ளிகள் இன்னும் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மற்ற விசயங்கள் போல இதில் தளர்வு அறிவிக்க முடியாது.
6ல் இருந்து 17 வயது வரை உள்ள மாணவர்களே பள்ளியில் பயிலும் நிலை உள்ளது. இவர்களது வயதை அடிப்படையாக கொண்டு பள்ளிகளை திறக்க அரசு நீண்ட காலமாக யோசித்து வருகிறது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 1 முதல் விருப்பபட்ட உயர்நிலை , மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நடந்த மருத்துவ ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய முதல்வர் எடப்பாடி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது தொடர்பாக மருத்துவ அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
