cinema news
ஸ்கேட்டர் கேர்ள் விமர்சனம்
பொதுவாகவே விளையாட்டை
மையமாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘ஜீவா’, ‘இறுதிச்சுற்று’, ‘சக்தே இந்தியா’, ‘எம்.எஸ்.தோனி’, ‘லகான்’, ‘டன்கல்’ என விளையாட்டு படங்களின் பட்டியல் மிக நீளம்.
அதே விளையாட்டை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் படம்தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும்’ஸ்கேட்டர் கேர்ள்’ திரைப்படம்.
மஞ்சரி மகிஜானி என்பவர் இயக்கி இருக்கும் இந்த சினிமா நம்மில் பலருக்கும் அதிகம் பரிச்சயப்படாத விளையாட்டான சறுக்கு விளையாட்டை மையமாக வைத்து கதை பேசி இருக்கிறது. இந்தி மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த சினிமா, ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு தொலைதூர கிராமத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ப்ரெர்னா எனும் சிறுமி கிராமத்தில் தனது தம்பி, தாய், தந்தையுடன் வாழும் பதின் பருவத்துப் பெண். சாதிய வேறுபாடுகள் படிந்து கிடக்கும் அக்கிராமத்தில் வாழும் பின்தங்கிய குடும்பம் ப்ரெர்னாவினுடையது. அவளுடைய ஸ்கேட்டர் கனவிற்கான விதையை லண்டனில் இருந்து அக்கிராமத்திற்கு வரும் ஜெஸிகா விதைக்கிறாள். பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமத்தில் வளரும் “ப்ரெர்னா” உள்ளிட்ட குழந்தைகளுக்கு அவ்வூரிலேயே ஸ்கேட்டர் விளையாட்டுக்கான மைதானம் அமையப் பெறுகிறது. அது எப்படி சாத்தியமானது. ப்ரெர்னாவின் கனவு பலித்ததா என்பதே இப்படத்தின் திரைக்கதை.
இத்திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம். படத்தை முழுமையாக பார்க்க பொறுமை வேண்டும்.
வலுவான திரைக்கதைதான், இயக்கத்தில் சற்று கவனம் கூட்டியிருக்கலாம். இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை. கதை கருவுக்கான காட்சிகளை இன்னும் விரிவு படுத்தி இருக்கலாம். அந்தச் சிறுமியின் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
கிட்டத்தட்ட நாடகத்தை போன்று எடுத்திருக்கிறார்கள்.
ஒருமுறை பார்க்கும் ரகம் இந்த திரைப்படம்.
Continue Reading