ஏடிஎம்களில் பணம் எடுக்க வரம்பு இல்லை! எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

ஏடிஎம்களில் பணம் எடுக்க வரம்பு இல்லை! எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஜூன் 30 வரை எந்த வரம்பும் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதார சுமைகளைக் குறைக்கும் பொருட்டு. பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சலுகையை வழங்கி வருகின்றன.

எஸ்பிஐ  வாடிக்கையாளர்கள் அதன் ஏடிஎம்களில் ஒரு ஐந்து முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாகப் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம் பிடிக்கப்படும்.

இந்நிலையில் தற்போதைய கொரோனா பரவும் காலத்தில் எஸ் பி ஐ வங்கி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திலோ அல்லது பிற ஏடிஎம்களிலோ பணம் எத்தனை முறை பணம் எடுத்தாலும் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.