சவுக்கு ஷங்கருக்கு குஷ்பு கொடுத்த பதிலடி

சவுக்கு ஷங்கருக்கு குஷ்பு கொடுத்த பதிலடி

சவுக்கு என்பவர் ஒரு காலத்தில் திமுகவுக்கு எதிரான விசயங்களை எழுதி வந்தார். ஊழல் ஊழல் ஊழல் என எல்லா இடத்திலும் நடக்கும் ஊழல் பற்றி எழுதி வந்தார். அதன் மூலம் சமூகவலைதளங்களில் சவுக்கு சங்கர் என்ற பெயரில் பிரபலமானார்.

ஒரு கட்டத்தில் திமுகவை எதிர்ப்பதை விட்டு விட்டு பிஜேபியை எதிர்க்கும் முழு நேர போராளியாக மாறினார்.

இவரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சையாகி விடுவதுண்டு. இன்றும் வழக்கம்போல சர்ச்சையாக ஒன்றை சொல்லியுள்ளார். சிதம்பரம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற குஷ்புவை முட்டுக்காட்டிலேயே கைது செய்துள்ளனர்.

இதை எதிர்த்து அவர் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டல் வளாகத்திலேயே குஷ்பு தர்ணா போராட்டம் நடத்தினார். அவருடன் நிர்வாகிகள் 5 பேர் உள்ளனர். இதை நக்கலாக கூறிய சவுக்கு சங்கர் குஷ்புவுக்கே கூட 10 பேருதான் இருக்கானுங்க. அண்ணாமலைக்கெல்லாம் ஆட்டுக்குட்டி கூட வராது என கூறியுள்ளார்.

இதை பார்த்த குஷ்பு பதிலடியாக ஒன்றை கூறியுள்ளார் குறைந்த பட்சம் அடிப்படை செய்திகளை பார்த்து விட்டு விமர்சனம் செய்யுங்கள் என கூறியுள்ளார்.